திருமயிலையில் திருவள்ளுவருக்கு இசை ஆராதனை விழா
தமிழர் திருநாளாம் தைத்திருநாளையும், உலக பொதுமறை தந்த வள்ளல் ஐயன் திருவள்ளுவரை போற்றும் வகையில் 133 அதிகாரத்தை நினைவூட்டும் வகையில் 133 நாதஸ்வரம், 133 தவில் கலைஞர்களைக் கொண்டு இசை ஆராதனை விழா, மங்கள இசைக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. திருவையாறு தியாகராஜர் இசை ஆராதனை விழா போன்று திருமயிலையில் திருவள்ளுவருக்கு இசை ஆராதனை விழா இவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. 2014ம் ஆண்டு மத்திய அரசு வழக்கறிஞர் மயிலை எஸ்.சத்யா அவர்கள் தலைமையில், சிகப்பு நாடா ஆசிரியர் திரு.ஆர்.ராஜேஷ் அவர்கள் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக வருகை தந்த மாண்புமிகு ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் (மத்திய கப்பல் துறை அமைச்சர்) அவர்களால் விழா துவக்கி வைக்கப்பட்டது.




