மக்களின் மனக்குறையை தீர்க்கும் அன்னை வேளாங்கண்ணி

0
1475

மக்களின் மனக்குறையை தீர்க்கும் அன்னை வேளாங்கண்ணி

ரோக்கிய மாதா திருத்தல பேராலயம் புகழ்பெற்ற “இத்திருத்தலம் தஞ்சை மறை மாவட்டத்தின் கலங்கரை தீபமாக திகழ்கிறது. இந்த திருத்தலத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் சார்ந்த லட்சகணக்கான மக்கள் திரண்டு வந்து, அன்னையின் அன்பைப்  பருகி செல்கிறார்கள். அவதியுறும் மக்களை அரவணைத்து தேற்றி வரும் அத்தாயின் பரிவையும் பாசத்தையும் அனுபவித்து மகிழ்ந்து  போகிறார்கள். மொழியினாலும், சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும்  புண்ணிய பூமியாக திகழ்ந்து வருகிறது

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நாகபட்டினத்திலிருந்த ஒரு பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி,  தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார். அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அவன் குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான். பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மக்கள் அனைவரும் அன்னை காட்சியளித்த இடத்தில் மக்கள் கூடி ஜெபித்தனர்.

ஓருநாள் கால் ஊனமுற்ற ஒரு சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான், அப்போது ஒரு நாள் எழில் மிகு தோற்றத்துடன் வேளாங்கண்ணி மாதா தனது குழந்தை யேசுவுடன் காட்சி தந்து தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டார். தாயின் பேரழகையும், குழந்தையின் தெய்வீக திருமுகத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்த சிறுவன் குழந்தைக்கு மகிழ்வுடன் மோர் வழங்கினான். அப்போது அந்த பேரழகு பெட்டக தாய், அந்த கால் ஊனமுற்ற சிறுவனிடம் பின்வருமாறு சொன்னார். ”மகனே உடனே நாகபட்டினம் சென்று அங்கே வாழும் ஒருவரிடம்

நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக “என்றார், ஆனால் அந்த சிறுவனோ தான் கால் ஊனமுற்றவன் என்னால் எப்படி போக முடியும் என்ற ஏக்க பார்வையோடு வேளாங்கண்ணி மாதாவை பார்க்கிறான், அவனின் ஏக்கத்தை புரிந்துகொண்ட வேளாங்கண்ணி மாதா “மகனே எழுந்து நட“ என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார் மரியன்னை, அந்த சிறுவன் உடனே எழுந்து ஓடினான். அந்த சிறுவனின் ஓட்டம் நாகபட்டினத்தில் சென்று நடந்ததை சொன்னான், அவனின் வார்த்தைகளை கேட்டு மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

உடனே அந்த சிறுவனுடன் வேளாங்கண்ணி மாதா காட்சி கொடுத்த அந்த இடத்திற்கு வந்தவுடன், தெய்வீக தாயின் குரலும் கேட்டது. மகனே இந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வழி செய்வாயாக இதை அறிந்த ஊர் மக்கள் ஒன்று கூடி அன்னைக்கு ஒரு ஆலயம் கட்டிமுடித்தனர்.

அந்த சமயம் இந்தியாவுக்கு பாய்மரக் கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் சிலர் நடுக் கடலில் வீசிய புயலில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மரியாளிடம் உதவி கேட்டனர். கரைக்கு சென்று சேர்ந்தால் உமக்கு ஒரு ஆலயம் கட்டுவோம் என்றும் வாக்குறுதி அளித்தனர்.

மரியன்னையின் உதவியால் புயல் அடங்கி கடல் சீற்றம் ஓய்ந்தது. கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை இறங்கினர். அன்று செப்டம்பர் 8ம் தேதி, தேவமாதாவின் பிறந்த நாள். தங்களை பத்திரமாகக் கரை சேர்த்த அன்னைக்கு நன்றியாக, வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் திருத்தலமாக மாறியது.