பிணி தீர்க்கும் வைத்திய வீரராகவர்

0
1242

பிணி தீர்க்கும் வைத்திய வீரராகவர்

தலபெருமை:

வைத்திய வீரராகவர் பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் குணமாகி விடுகிறது. தவிர கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்

தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள் கூட விலகுமாம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்து கொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார்.  தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்து  விட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார்.  வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.  கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் ஒரு வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார். ஒரு வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார்.

பிறகு படுத்துறங்க அந்த கிழவர் “எவ்வுள்’ என்று வினவ முனிவரும் தன் இடத்தையே காட்டி “இவ்விடம் படுத்துக் கொள்ளவும்’ என்றார். மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார். முனிவரிடம் “”வரம் கேள்’ என கூற இங்கு வரும் பக்தர்களுக்கு அவரது பிரச்சனைகளை நிறைவேற்றி வைக்கும்படி கேட்க, பகவானும் அவ்வாறே அருளி இங்கு எழுந்தருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.

திருஎவ்வுள், எவ்வுள்ளூர், வீச்சாரண்யச் ஷேத்ரம், புண்யாவார்த்த ஷேத்ரம் (இங்கு செய்யப்படும் புண்ணிய செயல்கள் பல மடங்கு விருத்தியாவதால்) என்று பல பெயர்கள் கொண்ட திருத்தலம்.

புத்திரப்பேறு அளிப்பது, திருமணத் தடை நீக்குவது, எப்படிப்பட்ட பிணியானாலும் போக்குவது என பக்தர்களின் கோரிக்கைகளை வேண்டும் வண்ணம் நிறைவேற்றும் திருத்தலம்.